/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்துகள் விற்பனையா? புதுச்சேரியில் அதிரடி ரெய்டு
/
போலி மருந்துகள் விற்பனையா? புதுச்சேரியில் அதிரடி ரெய்டு
போலி மருந்துகள் விற்பனையா? புதுச்சேரியில் அதிரடி ரெய்டு
போலி மருந்துகள் விற்பனையா? புதுச்சேரியில் அதிரடி ரெய்டு
ADDED : அக் 20, 2024 05:31 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி மற்றும் காலாவதி மருந்து விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நேற்று தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் அதிகாரி அனந்த கிருஷ்ணன், அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில், ஏழு பேர் கொண்ட குழுவினர் நேற்று புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், வினோயோக ஏஜென்சிகள், மருந்தகங்கள், தனியார் மருத்துவமனைகளில் இயங்கும் மருந்தகங்களில் சோதனை நடத்தினர்.
சோதனையில், காலாவதி மற்றும் போலி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், கண்காணிப்பு கேமராக்கள், குளிர்சாதன வசதி கணினி ரசீது வழங்காதது மற்றும் மருந்தாளுனர்கள் இன்றி மருந்துகள் வழங்கிய நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இதற்கு, உரிய பதில் அளிக்காத பட்சத்தில், 'லைசென்ஸ்' இடைநீக்கம் செய்யப்படும். இந்த அதிரடி சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.