sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது

/

பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது

பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது

பள்ளி அருகே கஞ்சா விற்பனை; அரியாங்குப்பத்தில் 4 பேர் கைது


ADDED : மார் 08, 2024 06:49 AM

Google News

ADDED : மார் 08, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : பள்ளி அருகே கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி - கடலுார் சாலை, நோணாங்குப்பம் அரசு பள்ளி அருகே நின்று கொண்டு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்த விஷ்வா, 20; பி.சி.பி., நகர் புஷ்பராஜ், 18; ேஹமச்சந்திரன், 18; முத்தியால்பேட்டை, சோலை நகர் ஆகாஷ், 25, ஆகியோர் என்பதும், அவர்கள், கஞ்சா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், மூன்று மொபைல் போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தப்பியோடி, முதலியார்பேட்டை விக்கி, ரெட்டியார்பாளையம் கணபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமூக அமைப்பு வலியுறுத்தல்

புதுச்சேரியில் சிறுமியை கடத்தி கஞ்சா போதை வாலிபர் உட்பட இருவர் பாலியல் பலாத்காரம் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. புதுச்சேரியில் கஞ்சா போதையில், கொலை, கற்பழிப்பு உட்பட பல குற்ற சம்பவங்கள் நடப்பதை போலீசாரால் தடுக்க முடியவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வருதையும் அவர்களால் தடுக்க முடியவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us