/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இன்று தேசிய கொடி ஊர்வலம் செல்வகணபதி எம்.பி., அழைப்பு
/
புதுச்சேரியில் இன்று தேசிய கொடி ஊர்வலம் செல்வகணபதி எம்.பி., அழைப்பு
புதுச்சேரியில் இன்று தேசிய கொடி ஊர்வலம் செல்வகணபதி எம்.பி., அழைப்பு
புதுச்சேரியில் இன்று தேசிய கொடி ஊர்வலம் செல்வகணபதி எம்.பி., அழைப்பு
ADDED : மே 15, 2025 02:30 AM
புதுச்சேரி: ராணுவ வீரர்களுக்கு நன்றி சொல்ல இன்று தேசிய கொடி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியலை கடந்து அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். உலகுக்கு நமது வலிமையையும் அதன் மூலம் எடுத்துரைத்தனர். அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இன்று 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேசிய கொடி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்படும் ஊர்வலம் பழைய நீதிமன்ற கட்டடம் அருகே சென்று முடியும். முப்படை ராணுவத்தினர், அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், காவல் துறையினர், நீதி துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கலாம்.
இது அரசியல் சார்ந்து நடக்கும் நிகழ்ச்சி இல்லை. தேச அபிமானத்துடன் ராணுவ வீரர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி. பாகிஸ்தானுக்கு பாடம் எடுத்த நமது ராணுவத்தினரை சல்யூட் அடித்து வாழ்த்தும் நிகழ்ச்சி. இதில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.