/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செல்வகணபதி எம்.பி., முதல்வர் சந்திப்பு
/
செல்வகணபதி எம்.பி., முதல்வர் சந்திப்பு
ADDED : நவ 04, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: செல்வகணபதி எம்.பி.,யை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அண்மையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர், கட்சி அலுவலகத்தில் தங்கி கொண்டே, அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்.
அவரை முதல்வர் ரங்கசாமி நேற்று காலை 11:00 மணியளவில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். சந்திப்பின்போது, ரமேஷ் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.