மீண்டும் தே.ஜ., கூட்டணி ஆட்சி செல்வம் எம்.எல்.ஏ., உறுதி
மீண்டும் தே.ஜ., கூட்டணி ஆட்சி செல்வம் எம்.எல்.ஏ., உறுதி
ADDED : மார் 28, 2026 05:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும் என, செல்வம் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் மக்களிடம் தெரிவித்து தேர்தலை சந்திக்க வருகின்றனர்.
ஆனால் இண்டி கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு யாருக்கு என்ன சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. நாங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்.
ஆனால் இண்டி கூட்டணி என்ன சொல்லி ஓட்டு கேட்பார்கள். பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக இந்திரா - ராஜிவ் சதுக்கம் வரை மேம்பாலம், புதுச்சேரியில் மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், பாடப்புத்தகம், புத்தகப்பை, உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,500 நிதியுதவி, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.
புதுச்சேரியில் நேரடி நியமனம் மூலம் 6,500 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்களாட்சி தொடர்ந்து நடந்திட புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போட்டு ஆதரவு அளிக்க வேண்டும்' என்றார்.
