/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டை தொகுதியில் செல்வம் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
/
முதலியார்பேட்டை தொகுதியில் செல்வம் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
முதலியார்பேட்டை தொகுதியில் செல்வம் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
முதலியார்பேட்டை தொகுதியில் செல்வம் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
ADDED : ஆக 13, 2025 02:47 AM

புதுச்சேரி : முதலியார்பேட்டையில் சாலை, வாய்க்கால் மற்றும் மின்விளக்கு பிரச்னைகள் குறித்து செல்வம் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
முதலியார்பேட்டை பகுதியில் சாலைகள் சேதமாகியுள்ளதோடு, வாய்க்கால்களில் கழிவுநீர் தேக்கம் மற்றும் எரியாமல் மின்விளக்குகள் உள்ளதாக இங்குள்ள பொதுமக்கள், செல்வம் எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், செல்வம் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
இங்குள்ள, மாங்காளியம்மன் கோவில் தெரு, சுந்தரராசு வீதி, கருமாற வீதி, சாமிநாத பிள்ளை வீதி, மூகாம்பிகை நகர், கிழக்கு வாசல் நகர், அமுதம் கார்டன் ஆகிய இடங்களில் உள்ள சேதங்களை பார்வையிட்ட செல்வம் எம்.எல்.ஏ., உடனே பழுதுபார்த்து, தேவையான நடவடிக்கைகளை செய்வதற்கு, சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். நகராட்சி உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ், பா.ஜ., தொகுதி தலைவர் புவனேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் செல்வகணபதி, செல்வமுத்துராயன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.