தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செமிகண்டக்டர் திட்டங்கள் புதுச்சேரியை வளர்ந்த மாநிலமாக மாற்றும்: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

 செமிகண்டக்டர் திட்டங்கள் புதுச்சேரியை வளர்ந்த மாநிலமாக மாற்றும்: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

 செமிகண்டக்டர் திட்டங்கள் புதுச்சேரியை வளர்ந்த மாநிலமாக மாற்றும்: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்


ADDED : பிப் 03, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பயோ-பார்மா, செமிகண்டக்டர் திட்டங்கள் புதுச்சேரியை வளர்ந்த மாநிலமாக மாற்றும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம், விவசாயம் மற்றும் தொழில் மேம்பாடு, செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இந்த . பட்ஜெட் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் உள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மூலதன செலவினம் ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரிப்பு, பயோ-பார்மா சக்தி திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி, செமிகண்டக்டர் மற்றும் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா வருகிற 2047-க்குள் உலக தொழில்நுட்ப மையமாக மாரும்.

எதிர்கால சாதனையாளர்களை உருவாக்குவதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 ஆயிரம் கோடியில் வளர்ச்சி நிதி, நாட்பட்ட நோய்களை தடுக்கும் வகையில் உயிரி மருந்துகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி, கார்பான் உமிழ்வை கட்டுப்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வருங்கால தலைமுறைக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான இந்தியாவை உருவாக்கி தரும்.

பயோ-பார்மா, செமிகண்டக்டர் திட்டங்கள் புதுச்சேரி மாநிலத்தை வளர்ந்த புதுச்சேரியாக மாற்றுவதோடு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை பன்மடங்கு உயர்த்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us