/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
/
ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஜன 27, 2025 05:05 AM
மரக்காணம்: பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் நவீன தொழில் முனைவு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் எதிர்கால வணிக மாற்றத்திற்கான சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில் தொழில் முனைவும் புதுமையும் என்ற தலைப்பில் நவீன கருத்தரங்கம் நடந்தது.
சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் கல்லூரியின் தொழில்முனைவு மேம்பாட்டுப் பயிற்சித் துறையும் இணந்து நடத்தினர்.
கல்லூரி செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்தார். பாலமுருகன் டிரேடர்ஸ்சின் மேலாண் இயக்குநர் அகரமுதல்வன் மாணவிகளுக்கு எதிர்கால தொழில் முனைவு குறித்து பேசினார்.
கணினிப் பயன்பாட்டியல் துறை பேராசிரியர் சரண்யா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார். மூன்றாமாண்டு மாணவிகள், முதுகலை பட்ட மாணவிகளும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.