/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'டயாலிசிஸ்' தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கு
/
'டயாலிசிஸ்' தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கு
'டயாலிசிஸ்' தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கு
'டயாலிசிஸ்' தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கு
ADDED : பிப் 19, 2026 05:19 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனம் சார்பில், டயாலிசிஸ் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
இந்திராகாந்தி அரசு மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்த கருத்தரங்கை, சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் துவக்கி வைத்தார். மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தின் நோடல் அதிகாரி குமார் வரவேற்றார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், பொதுமக்கள் குறைதீர் அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி சர்மா முன்னிலை வகித்தனர்.
மாநில உறுப்பு மற்றும் திசு மற்றும் நிறுவனத்தின் இணை இயக்குநர் மணிகண்ட பிரபு, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் நிபுணர் முரளி கிருஷ்ணா, நிபுணர்கள் சுதாகர், ரத்தினவேல் காமராஜ் ஆகியோர்,இறந்த நன்கொடையாளர்களின் மூளைத் தண்டு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
கருத்தங்கில், சென்னை, சேலம், புதுச்சேரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து ஒருங்கிணைப்பாளர்கள், டயாலிசிஸ் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

