தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாயிகள் அதிக மகசூல் பெற கருத்தரங்கம்

விவசாயிகள் அதிக மகசூல் பெற கருத்தரங்கம்

விவசாயிகள் அதிக மகசூல் பெற கருத்தரங்கம்


ADDED : அக் 23, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி வேளாண்துறை சார்பில் நெல் பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு அதிக மகசூல் சாகுபடி செய்வதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் வில்லியனுாரில் நடந்தது.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, காரைக்கால் பஜன்கோ கல்லுாரி மற்றும் ஹைதராபத் தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து நெல் உற்பத்தியில் தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் உருவையாறு சாய்பாபா கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.

கருத்தரங்கை வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் வசந்தகுமார் துவக்கிவைத்து, விவசாயிகள் நெல் மகசூல் அதிகம் கிடைக்க செய்யவேண்டிய பணிகள் குறித்து பேசினார்.

வேளாண் துறை பயிற்சி வழி மற்றும் தொடர்புத் திட்டம் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஜாகிர்உசேன், நெல் சாகுபடியில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள், பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவிப் பேராசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நெல் பயிர் செய்யும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us