தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெளிநாட்டு கல்வி வாய்ப்பு குறித்த கருத்தரங்கு

வெளிநாட்டு கல்வி வாய்ப்பு குறித்த கருத்தரங்கு

வெளிநாட்டு கல்வி வாய்ப்பு குறித்த கருத்தரங்கு


ADDED : செப் 23, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில் பிரெஞ்சு துறையும், கல்லுாரி தர உறுதியளிப்பு குழுவும் இணைந்து கேட்வே டூ பிரான்ஸ் என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் மதிவாணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன மேலாளர் ஷ்ருதி மிரியம் ஜோசப் கலந்து கொண்டு பிரான்சில் உயர்கல்வி வாய்ப்புக்கள் என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், பிரான்ஸ் ஒரு சிறந்த உயர்கல்வித் தளமாக விளங்குகிறது. சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், விண்ணப்பம் மற்றும் விசா செயல்முறை, கல்வி உதவித்தொகைகள், நிதி ஆதரவு, கல்விக்கு பிறகான வாய்ப்புகள் மற்றும் வரவிருக்கும் கல்வி கண்காட்சி குறித்த தகவல்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பிரஞ்சுத் துறைத் தலைவர் சரவணன், பேராசிரியர்கள் திருவேங்கடம்,  நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us