/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கம்
/
விவேகானந்தர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கம்
ADDED : ஜன 13, 2024 07:12 AM

புதுச்சேரி : வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, சுவாமி விவேகானந்தர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கருத்தரங்கை பள்ளி பொறுப்பு முதல்வர் வில்சன் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஆல்பர்ட் ரமணா தலைமை தாங்கினார். விரிவுரையாளர் பழனிவேல் வரவேற்றார்.
தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் கலந்து கொண்டு 'மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தர்' என்ற கருத்துரை வழங்கினார்.
இதில், மாணவிகளுக்கு விவேகானந்தர் பேச்சுகள் அடங்கிய புத்தகம் பரிசாக வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி விரிவுரையாளர்கள் அருள், மாயவன், வனிதா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.