/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்க கூட்டம்
/
மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்க கூட்டம்
ADDED : ஆக 27, 2025 11:11 PM

புதுச்சேரி: பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கத்தின் கூட்டம் நடந்தது.
புதுச்சேரி செயின்ட் பேட்ரிக் மேல்நிலை பள்ளியில் கூட்டம் நடந்தது. தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். டாக்டர் நளினி வரவேற்றார் .
2024-25ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை பொருளாளர் ராமலிங்கம் வாசித்தார். எஸ்.பி.ஐ., சார்பில் உதவி பொது மேலாளர் அன்புமலர் தொகுத்து வழங்கினார்.
செயலார் கிருஷ்ணராஜ் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 5 லட்சம் ரூபாய், சங்க உறுப்பினர்கள் 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு காப்பீட்டு அட்டை பெறுவதற்கு சங்கம் ஏற்பாடு செய்து, உடனடியாக வழங்கப்பட்டது. சங்கத்திற்கு தனியாக அலுவலம் கட்டடம் அரசிடம் கேட்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் வீரப்பன் நன்றி கூறினார்.