தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருந்து நிறுவனங்களுடன் சீனியர் எஸ்.பி., ஆலோசனை

மருந்து நிறுவனங்களுடன் சீனியர் எஸ்.பி., ஆலோசனை

மருந்து நிறுவனங்களுடன் சீனியர் எஸ்.பி., ஆலோசனை


ADDED : மே 09, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், புதுச்சேரியில் உள்ள 7 முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மேலாளர்கள், பிரதிநிதிகள், மருந்து ஆய்வாளர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், போதை பொருட்கள் தொடர்பான ரசாயனங்கள் கையாளுதல் மற்றும் பயன்படுத்துவதில் கடுமையான நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். போதை ரசாயனங்கள் உரிய அனுமதியின்றி கம்பெனியில் இருந்து சட்டவிரோத செயல்களுக்கு விற்பனை செய்ய கூடாது. போதை பொருள் ரசாயனங்களை கையாளும் ஊழியர்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு, மருந்து நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஆகையால், மருந்து நிறுவனங்கள் அத்தியாவசிய ரசாயனங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், மருந்து விநியோகத்தை தீவிரமாக கண்காணிக்கவும் வேண்டும் என, மருந்து தயாரிப்பு நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us