/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடிகளை கண்காணிக்க சீனியர் எஸ்.பி., அறிவுறுத்தல்
/
ரவுடிகளை கண்காணிக்க சீனியர் எஸ்.பி., அறிவுறுத்தல்
ADDED : ஏப் 18, 2025 04:08 AM
புதுச்சேரி: ரவுடிகளை கண்காணிக்க சட்டம், ஒங்கு ஆலோசனை கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., கலைவாணன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக சீனியர் எஸ்.பி., கலைவாணன் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் ரவுடிகளின் பட்டியல் குறித்து விளக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றப்பத்திரிக்கை தாக்கல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். ரவுடிகளின் பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். கஞ்சா விற்பனை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சீனியர் எஸ்.பி., போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.