/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்று திருவிழா காரணமாக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் தகவல்

ADDED : ஜன 18, 2025 06:48 AM
புதுச்சேரி : ஆற்று திருவிழா காரணமாக இன்று நடக்க இருந்த போலீஸ் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த டி.ஜி.பி., உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 3 மாதங்களாக குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது.
டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி.க்கள், எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.
ஆற்று திருவிழா காரணமாக இன்று 18ம் தேதி நடக்க இருந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அடுத்த வாரம் குறைதீர்வு கூட்டம் நடக்கும் என, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்துள்ளார்.