/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடி கைது; கிரைம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., பாராட்டு
/
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடி கைது; கிரைம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., பாராட்டு
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடி கைது; கிரைம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., பாராட்டு
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடி கைது; கிரைம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., பாராட்டு
ADDED : ஜன 13, 2025 05:26 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த கிரைம் போலீசாரை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.
புதுச்சேரியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி சம்பவங்களில் ஈடுப்படும் நபர்கள் வெளிமாநிலத்திற்கு தப்பிச் செல்வர். அத்தகை நபர்களை அந்தந்த போலீஸ் நிலைய கிரைம் போலீசார் மற்றும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 பிரிவாக உள்ள கிரைம் போலீசார் வெளிமாநிலம் சென்று கைது செய்து, நகை பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்வர்.
புதுச்சேரியில் சமீபத்திய கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்த கிரைம் போலீஸ் குழுக்களை சீனியர் எஸ்.பி., கலைவாணன் நேரில், வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
கோரிமேட்டில் நடந்த வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்த வடக்கு கிரைம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜி, தலைமை காவலர்கள் கோவிந்தன், ஹரிகரன், இசை வேந்தன், ஜெயக்குமார், ராஜசேகர், டேவிட், சுந்தரராமன் ஆகியோருக்கும், பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பைக் திருட்டு மற்றும் நில தகராறு வழக்கில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த சப்இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன், உதவி சப்இன்ஸ்பெக்டர்கள் பெரியண்ணசாமி, சுரேஷ், ஸ்ரீராம், சத்தியமூர்த்தி, கனோஜ்கரன், சந்திரசேகரன் ஆகியோரை சீனியர் எஸ்.பி., பாராட்டினார்.
ஒதியஞ்சாலை மதுபான கடை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், உதவி சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் பாலா, மோகன், கருணா, வீரமணி, அர்ஜூனன் ஆகியோருக்கும், நெட்டபாக்கம் பைக் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த கிரைம் போலீசாரையும் சீனியர் எஸ்.பி., பாராட்டினார்.