அக்கார்டு ஹோட்டல் சார்பில் 'செப்' குமார் இலவச மோர் வழங்கினார்
அக்கார்டு ஹோட்டல் சார்பில் 'செப்' குமார் இலவச மோர் வழங்கினார்
ADDED : ஏப் 14, 2026 06:59 PM

புதுச்சேரி:அக்கார்டு ஓட்டல் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச மோர் பந்தலில், தலைமை 'செப்' பொது மக்களுக்கு இலவச மோர் வழங்கினார்.
அக்கார்டு ஓட்டல் நிர்வாகம் சார்பில், கோடை காலங்களில் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் தாகம் தணிக்கும் விதமாக தங்கள் ஓட்டல் அருகில் இலவச மோர் பந்தலை அமைத்து மோர் வழங்கி வருகிறது.
மூன்று ஆண்டுகளாக இ.சி.ஆர்., சென்னை மற்றும் புதுச்சேரி ராஜிவ் சதுக்கத்தில் உள்ள அக்கார்டு ஓட்டல் உள்ளிட்ட நான்கு இடங்களில் இலவச நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அக்கார்டு ஓட்டல் மோர் பந்தலை நேற்று தலைமை 'செப்' குமார், மற்றும் 'செப்' ராஜி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இலவச மோர் வழங்கினர். நேற்று துவங்கி, வரும் மே மாதம் இறுதி வரை மோர் பந்தல் இருக்கும் என, நிர்வாக உதவி மேலாளர் இம்ரான் கான் தெரிவித்தார்.
