அரசு ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயமாகிறது
அரசு ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயமாகிறது
ADDED : அக் 08, 2024 03:02 AM

புதுச்சேரி: அரசு ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயமாக்கப்படுவது குறித்த இருநாள் பயிற்சி முகாம் துவங்கியது.
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறையின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி அனைத்து துறை அரசு ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம், டிஜிட்டல் மயமாக்கும் பணியில் புதுச்சேரி அரசு ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமை செயலகத்தில் தகவல் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் 'பே சாப்ட்' போர்ட்டலில் தகவல் தொகுப்பு பதிவேற்றம் தொடர்பான இருநாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
தகவல் தொழில்நுட்ப இயக்குனர் சிராஜ் மீனா துவக்கி வைத்து பேசும்போது, அரசு ஊழியர்களின் இ-மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல்களை விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில், 'பே சாப்ட்' போர்ட்டலில் இருந்து அரசு ஊழியர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்வது குறித்து காணொளி மூலம்விளக்கப்பட்டது. பிறந்த பதிவு திருத்தம், இ-மெயில் உருவாக்கம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளைபுதுச்சேரி தகவல் தொழில்நுட்ப இயக் குனரகம், பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்த துறையுடன் இணைந்து செய்துள்ளன.
