/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : ஜன 03, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பணி ஓய்வு பெற்ற சட்டசபை காவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி சட்டசபை செயலகத்தில் சபை காவலர்கள் ராமலிங்கம் சங்கர், விசுவநாதன் ஆகியோர் பணிநிறைவுப் பெற்றனர்.
அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா சட்டசபையின் செயலர் தயாளன் தலைமையில் நடந்தது.
சட்டசபை விவாத பதிவாளர் அலமேலு, கண்காணிப்பாளர்கள் முருகன், சுகுமாரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சட்டசபையில் மூவரின் சேவைகளும் நினைவு கூறப்பட்டது.
சட்டசபையின் செயலர் தயாளன் நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டசபை காவலர்கள் கலந்து கொண்டனர்.