சேவை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை மின்னணு பரிமாற்ற அஞ்சல் மூலம் பதியலாம் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
சேவை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை மின்னணு பரிமாற்ற அஞ்சல் மூலம் பதியலாம் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
ADDED : மார் 18, 2026 04:19 AM
புதுச்சேரி: சேவை வாக்காளர்கள் மின்னணு பரிமாற்றம் அஞ்சல் மூலம் தங்கள் ஒட்டுகளை பதிவு செய்யலாம் என, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
மத்திய ஆயுதப்படைகளில் உறுப்பினராக இருப்பவர், ஒரு மாநிலத்தின் ஆயுத போலீசாராக இருந்து கொண்டு வெளி மாநிலத்தில் பணிபுரிபவர். இந்திய அரசின் கீழ் வெளிநாட்டில் உள்ள பதவியில் பணிபுரியும் நபர் ஆகியோர் சேவை வாக்காளர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களுக்கான மின்னணு பரிமாற்ற அஞ்சல் ஓட்டுச்சீட்டு
மேலாண்மை அமைப்பு என்பது, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், டாஷ்போர்டு மற்றும் அறிக்கை வசதிகளுடன் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் பயன்படும் ஒரு ஒருங்கிணைந்த முறையாகும்.
இந்த அமைப்பின் மூலம், சேவை வாக்காளர்களுக்கான அஞ்சல் ஓட்டுச்சீட்டுகள் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டுஅனுப்பப்படுகின்றன. மேலும், இந்த அமைப்பு இந்திய அஞ்சல் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், சேவை வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்த பின், எந்த கட்டணமும் செலுத்தாமல் ஸ்பீட் போஸ்ட் மூலம் அஞ்சல் ஓட்டுச்சீட்டினை அனுப்பலாம்.
ஒவ்வொரு சேவை வாக்காளருக்கும், அஞ்சல் வாக்குச்சீட்டுடன் விரிவான வழிமுறைகள் அனுப்பப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை நாளில், அஞ்சல் மூலம் பெறப்பட்ட ஓட்டுச்சீட்டுகள் இந்த அமைப்பின் மூலம் சரிபார்க்கப்படும்.
அதாவது, பெறப்பட்ட மின்னணு அஞ்சல் ஓட்டுச்சீட்டு இந்த அமைப்பில் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. சேவை வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் ஓட்டுச்சீட்டுகள் என, அழைக்கப்படுகின்றன.
பதிவு அதிகாரி, யூனிட் அதிகாரி, கமாண்டண்ட் அல்லது பிற தகுதி வாய்ந்த அதிகாரிகள், சேவை வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த மின்னணு வாக்குப்பதிவு முறை அனைத்தும், https://etpbms.eci.gov.in/ என்ற இனைய தளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
