/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி தினம்
/
சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி தினம்
ADDED : ஜன 19, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சேஷாத்திரி சுவாமிகள் 155வது ஜெயந்தி தினத்தை யொட்டி, சிவ பஞ்சாஷர ஹோமம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடக்கிறது.
அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில், சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. அங்கு, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு ேஹாமம் நடந்து வருகிறது.
சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் 155வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, இன்று சிவ பஞ்சாஷர ஹோமம், 108 சங்காபிேஷ கம் மாலை 4:00 மணியளவில் நடக்கிறது.