/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2வது முறையாக நிரம்பிய செட்டிப்பட்டு தடுப்பணை
/
2வது முறையாக நிரம்பிய செட்டிப்பட்டு தடுப்பணை
ADDED : நவ 27, 2024 11:23 PM

திருக்கனுார் : செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் தடுப்பணை, தொடர் கனமழை காரணமாக ஒரே மாதத்தில் 2வது முறையாக நிரம்பி வழிகிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு - திருவக்கரை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் விவசாயிகள் நலன்கருதி தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் கடந்த 18 ம் தேதி பெய்த கனமழை காரணமாக, செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள புயல் எச்சரிக்கை காரணமாக பெய்து வரும் தொடர் மழையால், ஒரே மாதத்தில் 2வது முறையாக செட்டிப்பட்டு தடுப்பணை முழுதும் தண்ணீர் நிரம்பி வழிந்து வருகிறது. இதில், அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் நத்தை மற்றும் மீன்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.