ADDED : பிப் 13, 2025 05:04 AM

புதுச்சேரி: மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
புதுச்சேரி, மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் 68வது ஆண்டு விழா நடந்தது. விழாவை செவன்த் டே அட்வென்டிஸ்ட் கல்வி மண்டல அதிகாரி பிராங்கிளின் வாட்சன் துவக்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் ஸ்பர்ஜன் சுகுமார் வரவேற்றார். பள்ளி வளாக பொறுப்பாளர் பீட்டர் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், கல்வித்துறையின் முதன்மை கல்வி அதிகாரி மோகன் கலந்து கொண்டு, பள்ளி அளவில் முதலிடம், வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்கள், அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தென்கிழக்கு இந்தியா ஒன்றியத்தின் இணை செயலாளர் ஆர்தர் பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். மாணவ, மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் பொருளாளர் அப்பல்லோ ஜோசப் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

