ADDED : ஜன 31, 2026 05:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் 69வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, ஒயிட் டவுன் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் உயர்நிலைப் பள்ளி, மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் சார்பில், நடந்த விழாவில், பள்ளி முதல்வர் ஸ்பர்ஜன் சுகுமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சம்பத் எம்.எல்.ஏ., தென்கிழக்கு ஒன்றிய பொருளாளர் செல்வம் சுவாமிதாஸ், ஜெயச்சந்திரன், ரத்தினம் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், பள்ளியளவில் வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும், பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
பொருளாளர் கில்பர்ட் ஜோசப் நன்றி கூறினார்.

