தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாக்கடைக்கு சிங்கார அலங்காரம்   வீடியோ வைரல்

சாக்கடைக்கு சிங்கார அலங்காரம்   வீடியோ வைரல்

சாக்கடைக்கு சிங்கார அலங்காரம்   வீடியோ வைரல்


ADDED : டிச 29, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகள் வர, துவங்கி விட்டனர்.

இதனால் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுப்பணித்துறை அலுவலகம், சோனாம்பாளையம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கவர்னர் மாளிகை உள்ளிட்ட கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பெரிய வாய்க்காலை ஒட்டியுள்ள ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை ஆகிய இரு சாலையோர பிளாட்பாரத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், உடைந்து கிடக்கும் பெட்டி கடைகள், மாத கணக்கில் நிறுத்தி வைத்திருக்கும் பழுதான வாகனங்கள் அகற்றப்படவில்லை. ஆனால், இரு சாலையின் ஓரத்திலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், சோனாம்பாளையம் பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட அலுவலகம் வாசலில் செயற்கை நீர்ஊற்று உள்ளது.

செயற்கை நீரூற்று தொட்டியில் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் கழிவுநீராக மாறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. செயற்கை நீரூற்று சாக்கடை மீது மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.இதனை சமூக ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us