/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையுடன் கழிவுநீர் வாய்க்கால் பணி
/
சாலையுடன் கழிவுநீர் வாய்க்கால் பணி
ADDED : பிப் 12, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் 73 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் ரோகிணி நகரில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையுடன் கூடிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. அதே போல, லலிதா நகரில் 31 லட்சத்தில் தார் சாலையுடன் கூடிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.