/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.7.86 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
/
ரூ.7.86 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
ரூ.7.86 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
ரூ.7.86 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
ADDED : மார் 12, 2024 11:17 PM
அரியாங்குப்பம்,: அரியாங்குப்பம் தொகுதியில் ரூ. 7.86 லட்சம் மதிப்பீல் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கப்பட்டது.
அரியாங்குப்பம் தொகுதி காக்கயாந்தோப்பு பெருமாள் நகரில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 7.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை நேற்று பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலைப்பொறியாளர் சுரேஷ் உட்பட கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.