/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு
/
பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 14, 2025 01:14 AM

திருபுவனை : திருபுவனையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருபுவனை காவல் நிலையம் சார்பில், அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் கிளாடின் கிரேஸ்மாக் பார்லின் தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் பக்தவச்சலம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் பேசுகையில், 'பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது அனைவரது கடமை.
குற்றங்களை தடுக்க காவல்துறை சட்ட ரீதியாக நவடிக்கைகளை மேற்கொண்டாலும், புதிது, புதிதாக குற்றங்கள் நடக்கிறது. மாணவர் சமுதாயம் விழிப்போடு இருந்தால் குற்றங்களைத் தடுக்கலாம்' என்றார்.
தொடர்ந்து, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டம், இணைய வழி குற்றங்கள் குறித்தும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் காணொலி காட்சி மூலம் மாணவ, மாணவிகளுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.