தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் சக்திமா நிறுவனம் செயல் விளக்கம்

கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் சக்திமா நிறுவனம் செயல் விளக்கம்

கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் சக்திமா நிறுவனம் செயல் விளக்கம்


ADDED : அக் 02, 2024 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 08:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நடக்கும் கட்டுமானம் உள்ளிட்ட பொருட்களுக்கான கண்காட்சியில், சக்திமா நிறுவனம் தயாரித்த பொருட்கள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி, புனித அந்தோணியார் மஹாலில், கட்டுமானம் உள்ளிட்ட பொருட்களுக்கான கண்காட்சி நடந்து வருகிறது. இதில், வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான நவீன இறக்குமதி செய்யப்பட்ட, இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில், சக்திமா எண்டர்பிரைசஸ், 'சி-3' ஸ்டாலில் அரங்கம் அமைத்துள்ளது. அங்கு, அந்த நிறுவனத்தின் தயாரிப்பான வால் புட்டி, டைல்ஸ் பசைகள், பேஸ் கோட், லைம் வாஷ், வால் லக்ஸ், டைல் லக்ஸ், ஒண்டர் ஒயிட், ஒண்டர் பிளஸ், பிரைமர், ஜிப்சம் பிளாஸ்டர், உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்களை கொண்டு அரங்கில் நிறுவனத்தின் உரிமையாளர் நெடுமாறன், பார்வையாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்து வருகிறார்.

இந்த நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையம், திண்டிவனம் - செஞ்சி பிரதான சாலை எச்.பி., பெட்ரோல் பங்க் அருகிலும், புதுச்சேரி அலுவலகம், இ.சி.ஆர் பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுமான பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி பயன் பெறலாம்.

இந்த கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us