ADDED : மே 28, 2026 04:12 AM

காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாளித்து வருகிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம் நடந்து வந்தது. கடந்த 20ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம், 21ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. தேரோட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ., ராஜசேகரன், கலெக்டர் இஷிதா ரதி, தருமபுர ஆதின கட்டளை விசாரணை சிவகுருநாதர் தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்
ஐந்து தேர்களில் செண்பகத்தியாகராஜர், நிலோத்தம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். தேர்கள் தெற்கு வீதியில் புறப்பட்டு, வடக்கு, மேற்கு வீதி வழியாக நிலையை வந்தடைந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தியாகராஜா... தியாகராஜா... என்ற கேஷங்கள் முழுங்க தேர்களை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுந்தனர். இன்று சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
