ADDED : பிப் 28, 2026 05:00 AM
புதுச்சேரி: புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி, நுாறடி சாலை சிருங்கேரி சிவ கங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில், வரும் 6ம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடக்கிறது.
சனி பகவான் வரும் 6ம் தேதி காலை 8:24 மணிக்கு, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, நுாறடி சாலையில் உள்ள சிருங்கேரி சிவ கங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில், வரும் 6ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சனீஸ்வர பகவான் ப்ரீதி ஹோமம் துவங்குகிறது.
காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 8:24 மணிக்கு சனிபெயர்ச்சி நிகழும் நேரத்தில் மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படும்.
சனிப் பெயர்ச்சியால் பாதிப்பு குறையவும், நற்பலன்கள் பெருகவும் கும்பம், மீனம், மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜையில் கலந்து கொள்ளலாம். ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
