/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக்ஷண சமிதியில் நாளை சங்கர ஜெயந்தி உற்சவம்
/
தர்ம சம்ரக்ஷண சமிதியில் நாளை சங்கர ஜெயந்தி உற்சவம்
தர்ம சம்ரக்ஷண சமிதியில் நாளை சங்கர ஜெயந்தி உற்சவம்
தர்ம சம்ரக்ஷண சமிதியில் நாளை சங்கர ஜெயந்தி உற்சவம்
ADDED : மே 01, 2025 04:56 AM
புதுச்சேரி: புதுச்சேரி, தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் நாளை (2ம் தேதி) 2534ம் ஆண்டு சங்கர ஜெயந்தி மற்றும் 1008ம் ஆண்டு ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் நடக்கிறது.
அதையொட்டி நாளை காலை 8:00 மணிக்கு சாரம், அவ்வை திடல் கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து வேத மந்திரம் முழங்க ஊர்வலம் புறப்படுகிறது.
ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சித்தன் குடியில் அமைந்துள்ள ஜெயராம் திருமண நிலையம் சென்றடைகிறது. அங்கு ஸ்ரீமத் ஆதிசங்கரர் இயற்றிய ஸ்லோகங்களுடன் துவங்கி 1008 பக்தர்கள் சேர்ந்து காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 'விஷ்ணு சகஸ்ரநாமம்' மற்றும் 'அகண்ட லலிதா சகஸ்ரநாமம்' பாராயணம் செய்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இந்த உற்சவத்தில் தர்ம சம்ரக்ஷண சமிதி வழங்கிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே பாராயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.