/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆண்டு தர ஆய்வுக்காக புதுச்சேரிக்கு கப்பல் வருகை
/
ஆண்டு தர ஆய்வுக்காக புதுச்சேரிக்கு கப்பல் வருகை
ADDED : நவ 05, 2025 07:09 AM

புதுச்சேரி: தர ஆய்வுக்காக நாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரி உப்பளம் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் வந்துள்ளது.
புதுச்சேரி, உப்பளம் துறைமுகத்தில் பெரிய பார்ஜி மற்றும் சிறிய ரக பயணிகள் கப்பல் ஆகியவை பழுது மற்றும் சீரமைப்பு பணிகளை செய்வதற்கு, ஏற்றுவதற்கு 'டிரைடாக்' கிற்கு நாள் ஒன்றிற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., மற்றும் துறைமுகத்தில் நுழைவிற்கு ரூ. 2,500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதற்கு ரூ.7,000, மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவில் கட்டணம் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து பல நிறுவன கப்பல்கள் இங்கு வந்து சீரமைப்பில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றன. அதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் - இலங்கை இடையே இயக்கப்பட்டு வரும் 150 பேர் அமர்ந்து செல்லும் 'சுபம்' நிறுவனத்தின் சிவகங்கை பயணிகள் கப்பல் ஆண்டு தர ஆய்வு பணிக்காக புதுச்சேரி உப்பளம் துறைமுகத்திற்கு வந்துள்ளது. சென்னையில் உள்ள கப்பல் தர கண்காணிப்பு அதிகாரிகள் இந்தக் கப்பலை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு தான் வழக்கம் போல் இது பயணங்களில் ஈடுபடுத்த முடியும். அதிகாரிகளின் வருகையையொட்டி, கப்பலில் பெயின்ட் அடிப்பது மற்றும் சீராமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

