தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'சிவமும் குருவும்' பக்தி சொற்பொழிவு

 'சிவமும் குருவும்' பக்தி சொற்பொழிவு

 'சிவமும் குருவும்' பக்தி சொற்பொழிவு


ADDED : மே 20, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் நடந்த பக்தி சொற்பொழிவில் 'சிவமும் குருவும்' என்ற தலைப்பில் பேராசிரியர் புதுவைக் கிருஷ்ணா உரயைாற்றினார்.

லாஸ்பேட்டை, குமரன் நகரில் அமைந்துள்ள சிவகுரு உதவி மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கள் கிழமையன்று காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வழிபாடும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

மே மாதத்தின் மூன்றாவது திங்கள் கிழமையான நேற்று முன்தினம் பக்தி சொற்பொழிவும், வழிபாடும் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நடராஜன், திருநீலகண்ட நாயனாரின் வரலாற்றை விளக்கி கூறினார். சிவபெருமான் அடியாரிடம் அன்புகொண்டு கணவன், மனைவியின் பிரிவினை நீக்க மண்ணுக்குச் சிவனடியாராக வந்த நிகழ்வினை எடுத்து கூறினார்.

தொடர்ந்து, தலைநகர் தமிழ் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் புதுவைக் கிருஷ்ணா 'சிவமும் குருவும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து, சிவகுரு உதவி மையத்தின் தலைவர் சந்திரசேகரன் ஆரத்தி வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us