/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 'பலே' திருடர்கள் போலீசார் விசாரணையில் 'திடுக்' தகவல்
/
பாகூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 'பலே' திருடர்கள் போலீசார் விசாரணையில் 'திடுக்' தகவல்
பாகூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 'பலே' திருடர்கள் போலீசார் விசாரணையில் 'திடுக்' தகவல்
பாகூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 'பலே' திருடர்கள் போலீசார் விசாரணையில் 'திடுக்' தகவல்
ADDED : ஜன 05, 2025 05:50 AM

பாகூர்: பாகூரில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகூர் அடுத்த குருவி நத்தம் பெரியார் நகர் புத்து கோவில் அருகே உள்ள ரைஸ் மில் மற்றும் அதனையொட்டி இருந்த தாம்பூல பை தயாரிக்கும் கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது.
சத்தம் கேட்டு பொது மக்கள் கூச்சலிடவே அந்த கும்பல் தப்பிச் செல்ல முயன்றது. 2 பேர் தப்பிச் சென்ற நிலையில், நெய்வேலியை சேர்ந்த பிரேம்குமார் 26; என்பவரை பாகூர் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து பைக், இரும்பு கம்பியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையில், இந்த கொள்ளை கும்பல் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் மீது நெய்வேலி டவுன்ஷிப்பில் 4 வழக்குகளும் கடலுாரில் ஒரு வழக்கும் உள்ளது.
அதேபோல், தப்பி யோடிய கூட்டாளிகளான நெய்வேலியை சேர்ந்த பெரு மாள், அஜித் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
கடந்த சில மாதத்திற்கு முன்பு திருட்டு வழக்கில் தைதான பெருமாளிடமிருந்து கடலுார் மாவட்ட போலீசார் 200 சவரன் நகைகளை கைப்பற்றி சிறையில் அடைத்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஜாமினில் வெளியேவந்து மீண்டும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி யில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
கடந்த வாரம் கடலுார் மாவட்டம் உடலப்பட்டு கிராமத்தில், 2 வீடுகளை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவத்தில் இந்த கும்பல் ஈடுபட்டு இருப்பதாக தமிழக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
தலைமறைவாக உள்ள பெருமாள், அஜித் ஆகியோரை புதுச்சேரி மற்றும் தமிழக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.