/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலணி வியாபாரிகள் ஆணையரிடம் மனு
/
காலணி வியாபாரிகள் ஆணையரிடம் மனு
ADDED : ஜன 08, 2025 05:16 AM

புதுச்சேரி :  புதுச்சேரி அனைத்து காலணி வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் யாகூப்அலி தலைமையில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவில், புதுச்சேரியில் சிறு, குறு காலணி விற்பனை கடைகளை நடத்தி வருகிறோம்.
சில ஆண்டுகளாக வெளியூரைச் சேர்ந்தவர்கள் தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை காலங்களில் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, ஸ்டால் அமைத்து காலணிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், புதுச்சேரியில் தொழில் செய்து வரும் சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக,பண்டிகை காலங்களை நம்பிதான் ஆண்டு முழுதும் வியாபாரம் செய்து வருகிறோம். அந்த சமயங்களில் ஸ்டால் அமைத்து விற்பனை செய்யும் நபர்களால், கடை நடத்துபவர்களுக்கு வியாபாரம் தடைப்பட்டு, குடும்பங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
முறையான விற்பனை ரசீது கொடுக்காமல் தொழில் செய்து வருகின்றனர். எனவே, பண்டிகை காலங்களில் அமைக்கப்படும் ஸ்டால் விற்பனைகளை ரத்து செய்ய வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.

