sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு


ADDED : பிப் 19, 2025 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 05:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால், : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, காரைக்காலில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 26ம் தேதி கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களை கைது செய்தனர்.

இதில் 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 மீனவர்களை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காரைக்காலில் கடந்த 11ம் தேதி முதல், மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

நேற்று 8வது நாளாக, இலங்கை கடற்படை மற்றும் மத்திய, மாநில அரசை கண்டித்து, காரைக்கால் மாவட்டம் முழுதும் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. ஆட்டோ, கார், தனியார் பஸ்கள் இயங்கவில்லை.

பிரதான சாலைகளில் இருந்த அனைத்து கடைகளும் மாலை வரை மூடப்பட்டிருந்தது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மீனவர்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், மத்திய, மாநில அரசு கண்டித்து, இன்று (19ம் தேதி) மீனவர்கள், ஆதார் மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us