sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று துவக்கம்: நவம்பர் 9,10 மற்றும் 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்

/

சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று துவக்கம்: நவம்பர் 9,10 மற்றும் 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்

சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று துவக்கம்: நவம்பர் 9,10 மற்றும் 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்

சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று துவக்கம்: நவம்பர் 9,10 மற்றும் 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்


ADDED : அக் 29, 2024 06:32 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்த பணி இன்று துவங்கி அடுத்த மாதம்28ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கின்றது.

இது குறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, வரும், 2025ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை, தகுதி பெறும் தேதியாக கொண்டு, 18 வயது நிரம்பிய அனைவரும், வாக்காளராக தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுவதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி இன்று 29ம் தேதி புதுச்சேரியில் துவங்குகிறது.

அத்துடன், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலும் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பணி, வரும் நவ.28 ம் தேதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், உரிமை கோரல்,ஆட்சேபனை தாக்கல் செய்து கொள்ளலாம். புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம்-6 பயன்படுத்த வேண்டும். பட்டியலில் பெயரை நீக்க படிவம்-7, பெயர் திருத்தம், இடமாற்றத்திற்கு படிவம்-8 பயன்படுத்த வேண்டும்.

வரைவு பட்டியல்


வரைவு வாக்காளர் பட்டியல் பொது விடுமுறை நீங்கலாக அனைத்து வேலை நாட்களிலும் காலை 8.45 மணி வரை முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

புதிய வாக்காளர்கள்


இதேபோல் 2025ம் ஆண்டு, ஏப்ரல், ஜூலை, மற்றும் அக்டோபர் முதல் தேதியில், 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வருங்கால வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஒவ்வொரு தகுதி தேதியின் முதல் மாதத்தில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். கல்லுாரி மாணவர்கள் தங்களுடைய கூகுள் பிளே ஸ்டோரில் வோட்டர் ெஹல்ப் செயலியை டவுண்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் கல்லுாரி வளாகத்தில் உள்ள நோடல் அதிகாரி மூலமாகவும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களது பட்டியலை சேர்க்க முடியும்.

சிறப்பு முகாம்


நவம்பர் 9,10 மற்றும் 23,24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கின்றது. அப்போது ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணியில் இருக்கும் அலுவலர் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருப்பதுடன், பெயர் சேர்த்தல்,நீக்குதல்,திருத்தம் குறித்த படிவங்களை பெற்றுக்கொள்வர்.

இறுதி பட்டியல்


நேரடியாக மட்டுமின்றி இணையம் வழியாகவும் விண்ணப்பிக்க தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில், தங்களின் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள மற்றும் நீக்கம் செய்ய, Voter Helpline app, nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கான விண்ணப்ப பரிசீலனை டிசம்பர் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us