ADDED : மார் 17, 2026 04:13 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே கார் மோதியதில் பைக்கிள் சென்ற திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றார்.
திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டராக பிரியா உள்ளார். இவர் நேற்று மாலை 3:00 மணியளவில் புதுச்சேரியில் இருந்து அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலை வழியாக வில்லியனுார் பகுதி நோக்கி தனது ஆக்சஸ் ஸ்கூட்டில் சென்றார்.
அப்போது வில்லியனுாரில் இருந்து வி.மணவெளி சாலையில் திரும்பிய மாருதி பெலினோ கார், சப் இன்ஸ்பெக்டர் ஸ்கூட்டி மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பிரியா, கை எலும்பு முறிந்து, தலை, இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்து மூச்சுபேச்சி இன்றி மயங்கி கிடந்தார்.
உடன் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
