ADDED : பிப் 20, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால், தியாகராஜர் தெருவை சேர்ந்தவர் நாச்சியப்பன்; ஹோட்டலில் வேலை செய்கிறார். இவரது தாய் மீனாட்சி, 63; வயல்கரை வீதியில் தனியாக வசித்தார். இவர், கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மீனாட்சிக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவருக்கு நாச்சியப்பன் மருந்து கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
பின், மீனாட்சியை தொடர்புகொண்டபோது அவர் மொபைல் போனை எடுக்கவில்லை. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மீனாட்சி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

