தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முருங்கப்பாக்கத்தில் நாளை சித்தர்கள் மாநாடு

முருங்கப்பாக்கத்தில் நாளை சித்தர்கள் மாநாடு

முருங்கப்பாக்கத்தில் நாளை சித்தர்கள் மாநாடு


ADDED : பிப் 28, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தில் நாளை 1ம் தேதி சித்தர்கள் மாநாடு மற்றும் அசுவமேத யாகம் நடக்கிறது.

மன அமைதிக்கான ஆனமிக மையம் மற்றும் புதுச்சேரி அகில பாரத இந்து மகா சபை, அகில உலக ஆன்மிக பேரவை சார்பில், சித்தர்கள் மாநாடு மற்றும் அசுவமேத யாகம் முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் மந்தக்கரையில் நாளை (1ம் தேதி) நடக்கிறது.

மாநாட்டில், உலகில் சமாதானமும், அமைதியும் நிலவி போர்களற்ற சகாப்தம் உருவாகவும், மனிதகுலம் தன்னிறைவு பெறவும், மக்கள் பிறப்பின் பேருண்மையை உணர்ந்து கொண்டு, சக மனிதர்களோடு அன்பும், கருணையுடனும், இனக்கமாக வாழ்கின்ற வழிகளை நிறைவேற்றி கொள்வது குறித்து சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.

அகில உலக ஆன்மிக பேரவை நிறுவனர் தெய்வசிகாமணி சுவாமிகள், அகில பாரத இந்து மகாசபா புதுச்சேரிக்கான தலைவர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். மாநாட்டில், சித்தர்கள், ஆதினங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், சைவ சாதுக்கள், சன்னியாசிகள், துறவிகள், வைணவ அடியார்கள், ஆன்மிகவாதிகள் கலந்து கொள்கின்றனர். இதில், 1008 சங்கல்பதாரர்கள் மகா வேள்வியில் சமர்ப்பணம் செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us