ADDED : ஏப் 10, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஆர்ய வைஸ்ய யுவ ஜன சேவா சங்கம் சார்பில், புதுச்சேரியில் சித்த மருத்துவ முகாம் ஏப்ரல் 12ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி வைசியாள் வீதி, ஆர்ய வைசிய திருமண மண்டபத்தில், ஏப்ரல் 12ம் தேதி காலை 9:00 மணி முதல் 9:45 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் தோல், விஷ கடிகள், கண் தொடர்பாக பிரச்னை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கின்றனர்.
