ADDED : மார் 13, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ கருத்தரங்கு அரியூரில் நடந்தது.
மருத்துவமனை கண்காணிப்பாளரும், சித்த மருத்துவத் துறை தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் கலைமதி வரவேற்றார். மருத்துவ முகாமில் சித்த மருத்துவம் அவசியம் குறித்தும், சித்த மருத்துவ மூலிகைகள், மூலப்பொருள்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஆசிரியர் சவுமியா நன்றி கூறினார்.

