/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகை
/
தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 18, 2024 06:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி வவுச்சர் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு மூலம் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் புதுச்சேரி வவுச்சர் ஊழியர்கள், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், பொதுப்பணித் துறையில் தற்போது ரூ.10 ஆயிரம் ஊதியம் பெறும் வவுச்சர் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் அறிவித்தபடி ரூ. 18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் தலைமை பொறியாளர் தீனதயாளன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் 23ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.