/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவிகளுக்கு பாதுகாப்பு கோரி கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
/
மாணவிகளுக்கு பாதுகாப்பு கோரி கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
மாணவிகளுக்கு பாதுகாப்பு கோரி கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
மாணவிகளுக்கு பாதுகாப்பு கோரி கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 16, 2025 03:34 AM

புதுச்சேரி : புதுச்சேரி இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் வந்தனா, ஸ்டீபன் ராஜ், அபிஜித் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்.
இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, கல்வித்துறை அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதில், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டடங்கள் பழுதடைந்து உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, அடிப்படை கட்ட மைப்புகளை மேம்படுத்த வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும்.
அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

