/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி உதவித் தொகை கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகை
/
தீபாவளி உதவித் தொகை கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகை
தீபாவளி உதவித் தொகை கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகை
தீபாவளி உதவித் தொகை கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகை
ADDED : நவ 07, 2024 02:54 AM

புதுச்சேரி: தீபாவளி உதவித் தொகை கேட்டு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் உள்ள 28 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளியையொட்டி 1,500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்தும் இந்த தொகை கிடைக்கவில்லை.
இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் பாரதி வீதியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் அலுவலகத்தை நேற்று காலை 10:00 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, அதிகாரிகளிடம் வாக்குவாததத்தில் ஈடுபட்டனர். கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் தீபாவளி உதவி தொகை வழங்கவில்லை என, அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து காலை 11 மணியளவில் ஊர்வலமாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க தலைவர் பிரபுராஜ், பொதுசெயலாளர் சீனிவாசன், துணை தலைவர் மதிவாணன் தலைமையிலான நிர்வாகிகள் கவர்னரின் தனி செயலர் மாணிக்கதீபனை சந்தித்து முறையிட்டனர்.
அதற்கு அவர், கவர்னருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஒப்புதல் தரப்படவில்லை. ஓரிரு தினங்களில் அனுமதி தருவதாக கவர்னர் தெரிவித்துள்ளார் என, தெரிவித்தனர். இதனை ஏற்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.