தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சிங்கம் பார்க்

 சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சிங்கம் பார்க்

 சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சிங்கம் பார்க்


ADDED : பிப் 10, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி சிங்கம் பார்க் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதுள்ளதாக காங்., பொறுப்பாளர் தேவதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

காமராஜ் நகர் தொகுதியில், கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில், ஜிஞ்சர் ஓட்டல் எதிரே 'சிங்கம் பார்க்' எனும் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி மிகவும் மோசமான நிலையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்தப் பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஓய்வு எடுக்கும் பொழுது போக்கு பூங்கா இருந்தது. தற்போது, அரசின் அலட்சியத்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.சிங்கம் பார்க் ஒட்டியுள்ள தெரு, சாமி பிள்ளை தோட்டம், அணைக்கரை மேடு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாக இருந்தும், உழவர்கரை நகராட்சியும், அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அரசு மற்றும் உழவர்கரை நகராட்சி உடனடியாக தலையிட்டு, சிங்கம் பார்க் பூங்காவை சீரமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். இல்லையெனில், காங்., சார்பில் மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us