/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிங்காரவேலர் நினைவு நாள்: முதல்வர் மரியாதை
/
சிங்காரவேலர் நினைவு நாள்: முதல்வர் மரியாதை
ADDED : பிப் 12, 2025 03:55 AM

புதுச்சேரி, : புதுச்சேரி அரசு சார்பில் சிங்காரவேலர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கடலுார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.
காங்., கட்சி சார்பில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், நிர்வாகிகள் தனசு, இளையராஜா உள்ளிட்ட பலர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், சீனுவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தலைவர் ராமதாஸ், சேர்மன் வெங்கட்டராமன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிங்காரவேலர் மீனவ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.