தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'சிக்னல்' தராத ரங்கசாமி சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்

 'சிக்னல்' தராத ரங்கசாமி சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்

 'சிக்னல்' தராத ரங்கசாமி சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்


ADDED : மார் 22, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட 30 பேரில், என்.ஆர்.காங்., கட்சியில் 10 பேரும், பா.ஜ.,வில் 6 பேர் வெற்றி பெற்றனர். ப.ஜ., சார்பில் 3 நியமின எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இதே கூட்டணி தொடர்கிறது. அதில், என்.ஆர்.காங்., கட்சிக்கு 16, பா.ஜ.,விற்கு 10, ல.ஜ.க., விற்கு 2, அ.தி.மு.க.,விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், என்.ஆர்.காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளில் இதுவரை 8 பேர், 9 தொகுதிகளுக்கு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே, தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் ஆவர். மற்ற 4 பேரும் முன்னாம் எம்.எல்.ஏ.,க்கள் ஆவர்.

சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களான லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கரன் ஆகியோருக்கு வரும் தேர்தலில் 'சீட்' கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேபோல், பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் (நியமன எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் உட்பட) 6 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் இருவருக்கு 'சீட்' வழங்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us